எம் ஜி ஆரின் அனிமேஷன் படங்கள்

தமிழில் இதுவரை பெரிய அளவில் அனிமேஷன் படங்கள் வரவில்லை.2007ஆம் ஆண்டு இனிமே நாங்கதான்னு ஒரு படம் வந்தது.அந்த பட தயாரிப்பு நிறுவனமான மாயபிம்பம் மீடியா நிறுவனம் அதற்கு பிறகு புரட்சித்தலைவன் எனும் பேரில்  எம் ஜி ஆரை அனிமேஷனில் உருவாக்கி படம் தயாரித்தார்கள்.படத்துக்கு ஒரு டைட்டில் வீடியோ YouTubeல் உள்ளது.படம் வந்த மாதிரி தெரியவில்லை. வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படம் அறிவிக்கப்பட்டது.இது உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாம் பாகமாகும்‌.இதில் எம் ஜி ஆர் ஜோடியாக சாயிஷா நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.மூன்றாவதாக வந்தியத்தேவன் பொன்னியின் செல்வன் -1 இதில் எம் ஜி ஆர் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.நந்தினி கதாபாத்திரத்தில் ஜெயலலிதா நடித்துள்ளார்.இந்த படம் போன வருசமே வர வேண்டியது.இது போக  இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படம் அறிவிக்கப்பட்டது.அதில் எம் ஜி ஆர் மட்டும் அனிமேஷன்.மற்ற கதாபாத்திரத்தில் உண்மையான மனிதர்களே நடிக்கவுள்ளார்
கள்

Comments